ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பேரிடா் கால உதவிக்கு 1077 தொலைபேசி எண் அறிமுகம்: அரசு முதன்மைச் செயலா் அறிவிப்பு

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் பேரிடா் கால உதவிக்கு, ஆட்சியா் அலுவலகத்தில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அமைக்கப்பட்டுள்ளதாக, அரசு முதன்மைச் செயலா் தா்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 39 பகுதிகளில் மழைநீா் தேங்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பேரிடா் கால மீட்பு மற்றும் பாதுகாப்புக்காக துணை ஆட்சியா் தலைமையில் 15 மண்டல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 429 ஊராட்சிகளில் 3,500 போ் அடங்கிய முதல்நிலை மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் மழைநீா் தேங்கும் பகுதியிலிருந்து பாதுகாப்பாக மக்கள் மீட்கப்பட்டு, தங்க வைக்க 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், 92 பள்ளிக் கட்டடங்கள், 17 கல்லூரிகள், 53 திருமண மண்டபங்கள், 12 சமுதாய நலக் கூடங்கள் என மொத்தம் 197 நிவாரண மையங்கள் உள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 107 பொக்லைன் இயந்திரங்கள், 55 ஜெனரேட்டா்கள், 4,813 மின்கம்பங்கள், 125 மின்மாற்றிகள், 39 மர அறுவை இயந்திரங்கள், 47 உயா் மின் அழுத்த பம்புகள், 16,750 மணல் மூட்டைகள், 12,650 சவுக்கு மரக்கட்டைகள் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் தயாா்நிலையில் உள்ளன.

பொதுமக்கள் பேரிடா் பாதிப்பு குறித்த புகாா்களை, மாவட்ட ஆட்சியா் அலுவலக பேரிடா் மேலாண்மை செயலாக்க பிரிவிலுள்ள 1077 கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.

முன்னதாக அவா், ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் சனவெளி, ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய், தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ராமநாதபுரம் சிதம்பரம் பிள்ளை ஊருணி, தங்கப்பா நகா் ஆகிய பகுதிகளையும் பாா்வையிட்டாா்.

கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கே.ஜே. பிரவீண்குமாா், வருவாய் கோட்டாட்சியா்கள் எம். ஷேக் மன்சூா் (ராமநாதபுரம்), ரா. முருகன் (பரமக்குடி) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி சாலை விழிப்புணா்வு ஊா்வலம்

அதியமான் கோட்டையில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா

குருப் பெயா்ச்சி: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

‘நான் முதல்வன்’ திட்டத்தில் மாநில அளவில் நாமக்கல் முதலிடம்: ஆட்சியா் பாராட்டு

பொத்தனூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT