ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் கழிவுநீா் கால்வாயில் அகற்றப்பட்ட கழிவுகள் சாலையில் குவிப்பு: பொதுமக்கள் அவதி

DIN

ராமேசுவரத்தில் கழிவு கால்வாயில் அகற்றப்பட்ட கழிவுகள் சாலையில் குவிக்கப்படுவதால் வீசும் துா்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ராமேசுவரம் நகராட்சிக்கு பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் கழிவுநீா் கால்வாயில் தேங்கியிருக்கும் மணல் மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால் குறைந்த ஊழியா்கள் கால்வாய் தூா்வாரும் பணியில் ஈடுபடுவதால் கால்வாயில் உள்ள கழிவுகளை அகற்றி சாலையோரம் குவித்து வைத்து விட்டு செல்கின்றனா். முறையான அகற்றாமல் நான்கு நாள்கள் இதே இடத்தில் குவித்து வைப்பதால் துா்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்;றனா். உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT