முகப்பு
ராமநாதபுரம்

காதல் தம்பதி தூக்கிட்டு தற்கொலை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கிளாமரம் கிராமத்தை சேர்ந்த காதல் தம்பதி நாகையா மகன் நாகராஜ்(27). இவரது மனைவி தனலட்சுமி(21) கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் நான்கு

Updated On : 14 அக்டோபர் 2021, 5:08 pm IST
காதல் தம்பதி தூக்கிட்டு தற்கொலை
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கிளாமரம் கிராமத்தை சேர்ந்த காதல் தம்பதி நாகையா மகன் நாகராஜ்(27). இவரது மனைவி தனலட்சுமி(21) கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு பின்னர் காவல் நிலையம் மூலம் பெற்றோரை சமாதானப்படுத்தி அதே ஊரில் நாகராஜன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றனர்.

தனலட்சுமி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.  இந்த நிலையில் இன்று(வியாழக்கிழமை) அதிகாலையில்  மின்விசிறியில்  தூக்கிட்டு இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

தனலட்சுமி நர்சிங் படிப்பு முடித்துவிட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் வேலைக்கு சென்று வருகிறார். இவரது கணவர் நாகராஜ் விருதுநகர் மாவட்டம் ரெட்டியபட்டியில் ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணி செய்து வருகிறார்.

Advertisement

Advertisement

தனலட்சுமியின் பெற்றோர் வேறு நபருக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டிருந்த நிலையில் சமையல் மாஸ்டரை காதல் திருமணம் செய்து கொண்டதால் தனலட்சுமியின் பெற்றோர் மகள் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாக தெரிய வருகிறது.

இதற்கிடையில் தனலட்சுமி, நாகராஜன் பெற்றோர்களுக்கு இடையே அவ்வப்பொழுது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் தாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால், இருவர் குடும்பத்தினருக்கு இடையே பிரச்னை தொடர்ந்து வருவதால்  இருவரும் மன அழுத்தம் தந்த வேதனையில்  தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவர்களது உடல்களை கமுதி போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக  அனுமதித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments