சென்னை மக்களுக்கு நல்ல செய்தி சொன்ன வானிலை!
கனமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்ன நல்ல செய்தி பற்றி..
சென்னையில் ஜூன் 25ல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை அவ்வப்போது ஒருசில இடங்களில் மழை பெய்து வந்தாலும், தமிழகத்துக்கு வரவேண்டிய சராசரியான மழை இன்னும் பெய்யத் தொடங்கவில்லை.
முன்னதாக அந்தமானிலும், அதன்பிறகு தாமதமாக கேரளத்திலும் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. கேரளத்தைப் பொருத்தவரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது.
Advertisement
Advertisement
ஆனால், தமிழகத்தில் இந்தாண்டு கோடைக்கால மழை, அதாவது தென்மேற்குப் பருவமழை அதிகாரப்பூர்வமாக இன்னும் தொடங்கவில்லை. பல்வேறு அணைகளில் நீர்மட்டம் நாளுக்குநாள் சரிந்து வருகின்றது. இதனால், விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
அதிலும், நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிடக் குறைவாகப் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்திருந்தது. 'எல் நினோ' உருவானதே இதற்குக் காரணமென்றும், எல் நினோ ஜூன் மாதத்தில் வலுவிழக்கும் என்றும், அதன்பிறகு செப்டம்பர் மாதத்தில் மிதமானது முதல் வலுவானதாக மாறக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்துவருகின்றது. ஆனாலும், ஜூன் மாதத்தில் தொடங்கும் வழக்கமான மழைப்பொழிவு இதுவரை தொடங்கவில்லை.
இருப்பினும், சென்னை மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் நல்ல செய்தி ஒன்றை தெரிவித்துள்ளது.
அதாவது, ஜூன் 25ல் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
The Meteorological Department has stated that there is a possibility of heavy rain in Chennai on June 25.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.