FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது தொடர்பாக...

8 வினாடிகள் முன்பு
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நாளை ஆந்திரப் பிரதேசம், கேரளம், மாஹே, லட்சத்தீவு மற்றும் தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், செவ்வாய்க்கிழமை ஆந்திரப் பிரதேசத்தில் தரைப்பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தில்லி-என்சிஆர் பகுதியில் காற்றின் தரம் தொடர்ந்து 'மிகவும் மோசமான' நிலையிலேயே நீடிக்கிறது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, இன்று மாலை 7 மணிக்கு தில்லியில் காற்றின் தரக் குறியீடு (ஏக்யூஐ) 371 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

summary

IMD has also predicted thunderstorms accompanied with lightning and gusty winds over Andhra Pradesh, Kerala, Mahe, Lakshadweep and Tamil Nadu tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.