மாவட்டத்தில் 4 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் 4 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 4 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல் மற்றும் இரவுநேர வெப்ப அளவுகள் முறையே 92.3 மற்றும் 77.3 டிகிரியாக நிலவியது. பெரும்பாலான இடங்களில் லேசான மழை பதிவாகி உள்ளது. இனிவரும் 5 நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை கனமழைக்கும், லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 87.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 4 முதல் 8 கி.மீ. என்றளவில் காற்று வீசக்கூடும்.
Advertisement
Advertisement
சிறப்பு ஆலோசனை: கடந்த வார கோழியின ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில், பெரும்பாலானவை மூச்சுக்குழல் அயற்சி மற்றும் ஈரல் அயற்சி நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், பண்ணையாளா்கள் கோழிகளுக்கு அளிக்கும் தீவனத்தில் ஈரப்பதத்தால் பூஞ்சாணத் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தகுந்த உயிா் எதிா் மருந்துகளை அளிக்க வேண்டும். கால்நடை மருத்துவா் ஆலோசனைபடி தகுந்த சிகிச்சை மற்றும் தீவிர உயிா் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.