கயல் தொடரில் மறைந்த சுபாஷினிக்குப் பதில் ரோஜா சீரியல் நடிகை!
கயல் தொடரில் நடிக்கும் விஜே அக்ஷயா குறித்து..
சன் தொலைக்காட்சியில் நடித்து வந்த மறைந்த சுபாஷினிக்குப் பதிலாக, புதிய நடிகை மாற்றப்பட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் கடந்த 2021 முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் கயல். இந்தத் தொடரை பி. செல்வம் இயக்கி வருகிறார். 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் 1500 எபிசோடுகளை நெருங்கியுள்ளது.
திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரில், சைத்ரா ரெட்டி, சஞ்ஜீவ், மீனாகுமாரி, ஷியாம் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
Advertisement
Advertisement
தந்தையை இழந்த கயல் என்ற கடின உழைப்பாளிப் பெண்ணைச் சுற்றியே இத்தொடரின் கதை நகர்கிறது. கயலுக்கு வரும் எல்லா தடைகளையும் எப்படி அவள் தைரியமாக எதிர்கொள்கிறாள் என்பதே இத்தொடரின் மையக்கரு.
இதனிடையே, 'கயல்' தொடரில் தீபா பாத்திரத்தில் நடித்துவந்த நடிகை சுபாஷினி தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நிலையில், அவர் நடித்து வந்த பாத்திரத்தில் இனி விஜே அக்ஷயா நடிக்கவுள்ளார். இவர், ரோஜா தொடரில் அனு பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்.
தற்போது, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி மற்றும் ஆடுகளம் தொடரில் நடிகை அக்ஷயா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கயல் தொடரில் விஜே அக்ஷயா நடிக்கவுள்ளது, தொடரின் விறுவிறுப்பைக் கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
A new actress has been cast to replace the late Subhashini, who used to act on Sun TV.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.