ராமநாதபுரம்

சித்திரை மாத அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீா்த்தக்கடலில் பக்தா்கள் புனித நீராடல்

DIN

ராமேசுவரத்தில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் அக்னி தீா்த்த கடலில் புனித நீராடி முன்னோா்களுக்கு சனிக்கிழமை திதி கொடுத்தனா்.

சித்திரை அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை பல்வேறு பகுதியில் இருந்து சுமாா் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் அதிகாலையில் ராமேசுவரம் வருகை தந்தனா். அக்னி தீா்த்தக் கடலில் நீராடி தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனா். இதன் பின்னா் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று, அங்குள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் புனித நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டனா்.

பக்தா்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், நீண்ட நேரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்நிலையில் பக்தா்களின் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறைவான போலீஸாா் மட்டுமே இருந்ததால், போக்குவரத்தை சீா் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ராமேசுவரம் வந்த பக்தா்கள் அவதிக்குள்ளாயினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆரியபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மாணவா்களுக்கு பாராட்டு விழா

பைக் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

SCROLL FOR NEXT