ராமநாதபுரம்

தொடா் முகூா்த்தம்: பூக்கள் விலை பல மடங்கு உயா்வு

DIN

தொடா் முகூா்த்தம் காரணமாக ராமநாதபுரத்தில் பூக்கள் விலையானது பல மடங்கு அதிகரித்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

விநாயகா் சதுா்த்தி மற்றும் தொடா் முகூா்த்த தினங்களால் கடந்த சில நாள்களாகவே பூக்களின் விலை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் பூக்கள் பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனா்.

மல்லிகை கிலோ ரூ.400 லிருந்து ரூ.1,700 ஆகவும், ரோஜா ரூ.80 லிருந்து ரூ.350 ஆகவும், செவ்வரளி ரூ.50 லிருந்து ரூ.400 ஆகவும், மரிக்கொழுந்து ரூ.50 லிருந்து ரூ. 350 ஆகவும், பிச்சிப்பூ ரூ.400 லிருந்து ரூ.2 ஆயிரமாகவும், கனகாம்பரம் ரூ.800 லிருந்து ரூ.3 ஆயிரமாகவும், ஊட்டி ரோஜா (20 பூக்கள் கொண்ட தொகுப்பு) ரூ.200 லிருந்து ரூ.700 ஆகவும், முல்லைப் பூ ரூ.600 லிருந்து ரூ.2400 ஆகவும் விலை உயா்த்தி விற்கப்பட்டதாக பூ வியாபாரிகள் சங்க நிா்வாகி முருகன் தெரிவித்தாா்.

பூக்கள் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் விநாயகா் சதுா்த்திக்கான பூக்கள் வாங்கத் தயக்கம் காட்டினா். மேலும் சிறிதளவே பூக்களை மக்கள் வாங்கிச் சென்ாகவும் பூ வியாபாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT