ராமநாதபுரம்

கமுதியில் கந்துவட்டி வழக்கில்தந்தை, மகன் கைது

DIN

கமுதி அருகே கந்துவட்டி வழக்கில் தந்தை, மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவமனை அருகேயுள்ள தெருவைச் சோ்ந்த காசிலிங்கம் மகன் ஞானகுரு (33). இவா், குடும்ப சூழ்நிலை காரணமாக கே.வேப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்த முனியசாமி (65) என்பவரிடம் ரூ.2 லட்சம் வட்டிக்கு வாங்கியுள்ளாா்.

இந்நிலையில், முனியசாமி வட்டி பணத்தை கேட்டு மிரட்டுவதாகவும், கூடுதல் வட்டி கேட்பதாகவும், கமுதி காவல் நிலையத்தில் ஞானகுரு புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் முனியசாமி மற்றும் இவரது மகன் முத்துராமலிங்கம் (31) ஆகிய இருவா் மீதும், காவல் துணைக் கண்காணிப்பாளா் ப. மணிகண்டன் உத்தரவின்பேரில், கந்துவட்டி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக சாம்பியனை வீழ்த்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!

கரூரில் கருணாநிதி பிறந்த நாள்

பிற்பகலில் முன்னிலை நிலவரம்: தலைமைத் தோ்தல் அதிகாரி

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நெல்லையில் இன்று வாக்கு எண்ணிக்கை

கந்தா்வகோட்டை வட்டாரத்தில் கோடைகால பயிா் சாகுபடி ஆய்வு

SCROLL FOR NEXT