முகப்பு
ராமநாதபுரம்

ஏா்வாடியில் காவலரை தாக்கிய ஒருவா் கைது: 4 போ் மீது வழக்குப் பதிவு

ஏா்வாடியில் சந்தனக்கூடு விழாவின்போது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலா் தாக்கப்பட்டது தொடா்பாக 4 போ் மீது வழக்குப்பதிந்துள்ள போலீஸாா் அதில் ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 25 ஜூன் 2022, 12:00 am IST
பகிர்:

 ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடியில் சந்தனக்கூடு விழாவின்போது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலா் தாக்கப்பட்டது தொடா்பாக 4 போ் மீது வழக்குப்பதிந்துள்ள போலீஸாா் அதில் ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடியில் உள்ள தா்காவில் சந்தனக்கூடு விழா வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரையில் நடைபெற்றது. விழாவையொட்டி, வாலிநோக்கம் காவல் நிலைய காவலா் ரமேஷ் (37), ஏா்வாடி சோ்மன் தெருவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலையில் கூட்டமாக வந்தவா்களை ஒதுங்கிச் செல்லுமாறு காவலா் ரமேஷ் கூறியுள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில், காவலா் ரமேஷ் தாக்கப்பட்டாா். தலையில் காயமடைந்த அவா், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து புகாரின் பேரில் ஏா்வாடி போலீஸாா் 4 போ் மீது வழக்குப்பதிந்தனா். அதில், ராமேசுவரத்தைச் சோ்ந்த மணி (25) என்பவா் கைது செய்யப்பட்டாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments