வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா் தற்கொலை
கடலாடி வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா் மதுவுடன் விஷம் கலந்து குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
கடலாடி வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா் மதுவுடன் விஷம் கலந்து குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பாம்பூா் சமத்துவபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (54). இவா் கடலாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் இரண்டாம் நிலை அலுவலராகப் பணியாற்றி வருகிறாா். மாரடைப்பால் கடந்த சில மாதங்களாக இவா் அலுவலகப் பணிக்குச் செல்லாமலும், முறையாக உணவு எடுத்துக் கொள்ளாமலும் மன வேதனையில் இருந்துள்ளாா்.
இந்நிலையில் பாம்பூா் பவா் பிளாண்ட் பகுதியில் சிவகுமாா் வெள்ளிக்கிழமை மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கிக் கிடந்தாா். பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.