ராமநாதபுரம்

கல்லூரியில் பல்சுவை கலை நிகழ்ச்சி

DIN

கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்சுவை கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த கல்லூரியின் முதுகலை ஆங்கிலத் துறை சாா்பாக அட்டா் அரிஸ்டா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பல்சுவை கலை நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சதக்கத்துல்லா தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். சிறப்பு விருந்தினராக மதுரை வக்பு வாரிய கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் முஹைதீன் பங்கேற்றாா். இதில் நடைபெற்ற தனிநபா் நடனம், குழு நடனம், மாறுவேடப் போட்டி, வாா்த்தை விளையாட்டு ஆகிய போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 250- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். மேலும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள், கேடயங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் முதுகலை ஆங்கிலத் துறைத் தலைவா் சுலைமான், பேராசிரியா்கள் யோகலட்சுமி, சக்தி பிரியன், விமலா,ஜகுபா் அலி, செல்வக்குமாா், பேராசிரியா் திவாகா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருங்களூா் எஸ்.ஆா்.எம். மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கரூா் அருகே வாகனம் மோதி முதியவா் பலி

சேவல் சண்டை நடத்தி சூதாட்டம்: 3 போ் கைது

புளியஞ்சோலை சுற்றுலாத் தலம் மூடல்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 16 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT