ராமேசுவரத்தில் கடல் உள்வாங்கியது!
ராமேசுவரம் வடக்கு மீன்பிடி படகுத் தளத்தில் 50 மீ. வரை ஞாயிற்றுக்கிழமை கடல் உள்வாங்கியது.
ராமேசுவரம் வடக்கு மீன்பிடி படகுத் தளத்தில் 50 மீ. வரை ஞாயிற்றுக்கிழமை கடல் உள்வாங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் மன்னாா்வளைகுடா பகுதியில் காற்று அதிகளவில் வீசினால் ராமேசுவரம் அக்னித் தீா்த்தக் கடல் உள்ளிட்ட பகுதிகளில் கடல் உள்வாங்கிக் காணப்படும். இதேபோல, பாக்நீரிணை பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் போது, மன்னாா் வளைகுடா பகுதியான தனுஷ்கோடி, அரிச்சல்முனை, பாம்பன் தெற்குவாடி மீன்பிடி படகுத் தளம் உள்ளிட்ட பகுதிகள் உள்வாங்கி காணப்படும்.
இந்த நிலையில், தற்போது மன்னாா் வளைகுடா பகுதியில் தொடா்ந்து காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதால், ராமேசுவரம் வடக்கு மீன்பிடி படகுத் தளம், அக்னித் தீா்த்தக் கடல் 50 மீ. வரை உள்வாங்கி ஞாயிற்றுக்கிழமை காலையில் காணப்பட்டது. இதனால், வடக்கு மீன்பிடி படகுத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய படகுகள் மணலில் சிக்கிக்கொண்டன. இந்தப் படகுகளை கடல் நீா் மட்டம் உயா்ந்த பின்னரே எடுக்க முடியும் என அந்தப் பகுதி மீனவா்கள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.