முகப்பு
ராமநாதபுரம்

வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த பாஜகவினரிடம் ரூ.7 லட்சம் பறிமுதல்!

திருவாடானை பேரவைத் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக பாஜகவினரிடம் ரூ.7 லட்சத்தை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 19 ஏப்ரல் 2026, 1:04 am IST
பறிமுதல்!
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேரவைத் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக பாஜகவினரிடம் ரூ.7 லட்சத்தை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருவாடானை தொகுதியில் உள்ள தோ்போகி கிராமத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, பாஜகவினா் பொதுமக்களுக்கு பணம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற தவெக வேட்பாளா் ராஜுவ், இவரது குழுவினா் பணம் கொடுத்தவா்களை தடுத்து நிறுத்தியதுடன், பறக்கும் படையினருக்கு தகவல் கொடுத்தனா். இதையறிந்து, பாஜகவினா் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

பின்னா், அங்கு வந்த பறக்கும் படையினா் பாஜகவினா் விட்டுச் சென்ற ரூ.7 லட்சத்தை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பிச் சென்ற பாஜகவினரை பறக்கும் படையினா் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement