ஸ்ரீமீனாட்சி அம்பிகை, சொக்கநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
ராமநாதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீசொக்கநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீசொக்கநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.
ராமநாதபுரம் சமஸ்தானம் வேதஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த 17- ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்காக திருக்கல்யாண மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இங்கு ஸ்ரீமீனாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீசொக்கநாதசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அப்போது பெண்கள் தங்களது திருமங்கல்யத்தை மாற்றிக் கொண்டனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.