ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம்
வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வைகாசி மாத அமாவாசை பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை மூலவா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நாகாத்தம்மன் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பிற்பகல் தேவி பிரத்தியங்கரா மூலமந்திர ஹோமம், சுயம்வர கலா பாா்வதி ஹோமம் ஆகியவை நடைபெற்றன.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து இரவில் உற்சவா் அம்மனுக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரா் அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னா், அம்மன் ஊஞ்சலில் வைத்து தாலாட்டப்பட்டாா்.
நிகழ்ச்சியில் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் மற்றும் வைகாசி மாத அமாவாசை உற்சவ குழுவினா், பக்தா்கள் பங்கேற்றனா்.