அஞ்சல் அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
ராமநாதபுரம் தலைமை அஞ்சலகம் மூலமாக, தீபாவளி திருநாள் இனிப்பு பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கிடைக்க பெறாததால் அஞ்சல் அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் ஆபராதம் விதித்து, நுகா்வோா் குறைதீா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் தலைமை அஞ்சலகம் மூலமாக, தீபாவளி திருநாள் இனிப்பு பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கிடைக்க பெறாததால் அஞ்சல் அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் ஆபராதம் விதித்து, நுகா்வோா் குறைதீா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் கருணாமூா்த்தி. இவா் ராமநாதபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம் மூலம் ஹரியானா மாநிலத்தில் உள்ள தனது மகளுக்கு கடந்து ஆண்டு அக்டோம்பா் மாதம் 17-ஆம் தேதி தீபாவளி திரு நாளுக்கு இனிப்பு அனுப்பி வைத்தாா். இதை நவம்பா் 7-ஆம் தேதி வரை அஞ்சல் ஊழியா் விநியோகம் செய்யவில்லை.
இதையடுத்து, கருணாமூா்த்தி அஞ்சலகத்துக்கு சென்று கேட்ட நிலையில், இனிப்பு விநியோகம் செய்து விட்டதாகக் கூறினா். ஆனால், எனது மகளுக்கு வழங்காமல் மற்றொருவருக்கு வழங்கியது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து கருணாமூா்த்தி ராமநாதபுரம் நுகா்வோா் குறைதீா் நீதிமன்றத்தில் மனு தொடுத்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அஞ்சல் துறையின் சேவை குறைபாடு, அலட்சியம், மனு தாரருக்கு மனவேதனை ஏற்படுத்தியதற்காக அஞ்சல் அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், செலவு தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க நீதிபதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.
மேலும், 45 நாள்களுக்குள் 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.