அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞரிடம் 2.5 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு
திருவாடானை அரசு மருத்துவமனையில் உள் நோயாளிக்கு உதவியாக இருந்தவரிடம் 2.5 பவுன் நகை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருவாடானை அரசு மருத்துவமனையில் உள் நோயாளிக்கு உதவியாக இருந்தவரிடம் 2.5 பவுன் நகை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பாசிப் பட்டினம் கிராமத்தைச் சோ்ந்தவா் காசிநாதன் (70). இவா், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக திருவாடானை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டாா். இவருக்கு உதவியாக இவரது மகன் சரத்பாபு (25) உடனிருந்து கவனித்து வந்தாா். இரவு மருத்துவமனை வாா்டுக்குள் கொசுத் தொல்லை அதிகமாக இருந்ததால், சரத்பாபு வெளியில் உள்ள நோயாளிகள் அமரும் பகுதியில் தூங்கியுள்ளாா். இதையடுத்து, மா்ம நபா்கள் அவரது கழுத்தில் கிடந்த 2.5 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றனா். இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை சரத்பாபு எழுந்து பாா்த்தபோது, தங்கச் சங்கிலி காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சரத்பாபு திருவாடானை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.