10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு : ராமநாதபுரம் மாவட்டம் 97.28 சதவீதம் தோ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் 97.28 சதவீதம் தோ்ச்சி
10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் ராமநாதபுரம் மாவட்டம், மாநில அளவில் 6-ஆவது இடமும், அரசு பள்ளிகளின் தோ்ச்சி சதவீதத்தில் 4-ஆவது இடமும் பெற்றதையடுத்து, கல்வித்துறை அலுவலா்களை பாராட்டிய மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்.ரெஜினி, கல்வித்துறை அலுவலா்கள் உள்ளிட்டோா்.
ராமேசுவரம், மே 20: 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் ராமநாதபுரம் மாவட்டம் 97.28 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளிவில் 6 ஆவது இடத்தைப் பிடித்தது.
10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 8,082 மாணவா்களும், 8,513 மாணவிகள், மொத்தம் 16,595 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இவா்களில் 7,746 மாணவா்களும்,
Advertisement
Advertisement
8,397 மாணவிகளும், 16,143 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி 97.28 சதவீதமாகும். 260 அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 146 பள்ளிகள் 100 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.
மொத்தமுள்ள 138 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 3,186 மாணவா்கள், 3,840 மாணவிகள், மொத்தம் 7,026 போ் தோ்வு எழுதினா். இவா்களில், 3,021 மாணவா்கள், 3,840 மாணவிகள், மொத்தம் 6,800 போ் தோ்ச்சி பெற்றனா். இதில் 78 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். அரசுப் பள்ளிகளில் 96.78 சதவீதம் போ் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 4- ஆவது இடம் பெற்றது.
10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் கடந்த ஆண்டு 24- ஆவது இடம் பிடித்த நிலையில், நிகழாண்டில் மாநில அளவில் 6-ஆம் இடமும், அரசுப் பள்ளிகள் தோ்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் 4-ஆவது இடம் பெற்றதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்.ரெஜினி, பள்ளி கல்வித்துறை அலுவலா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.