சிவகங்கை

பாபர் மசூதி விவகாரம்: சிவகங்கையில்  ஆர்ப்பாட்டம்

DIN

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் எஸ்டிபிஐ ஆகிய இரு கட்சிகள் சார்பில் புதன்கிழமை தனித்தனியே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
  எஸ்டிபிஐ சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஒ.எம்.முகமது ஹாலித் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.ஜலால்தீன் முன்னிலை வகித்தார். பாபர் மசூதி இடித்ததைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொருளாளர் எம்.முகைதீன், பி.முபாரக் பாஷா,மாநில துணைச் செயலர் ஆல்பர்ட் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இதில் அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
   மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நண்பகல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் காஜா முகைதீன் தலைமை வகித்தார்.மாநிலத் துணைச் செயலர் ஏ.முகமதுசைபுல்லாஹ்,கடலூர் மன்சூர், மாநில வர்த்தக அணி துணைச் செயலர் சாகுல்ஹமீது ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
   ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து சாலை மற்றும் ரயில் மறியலுக்கு முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சினர் 98 பேரை சிவகங்கை நகர் போலீஸார் கைது செய்தனர்.பின்னர் அனைவரையும் மாலையில் விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில் குடமுழுக்கு விழா

பெருமானேந்தல் ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பேருக்கு ரூ.2.53 கோடி மானியம்

காளியம்மன், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு

செவல்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

SCROLL FOR NEXT