சிவகங்கை

100 நாள் வேலை கேட்டு பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் 100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நூறு நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். திருப்புவனம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில், திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இப் போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் எம். கந்தசாமி, ஒன்றியச் செயலர் ஜெயராமன், நகரச் செயலர் ஈஸ்வரன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் பழனிவேல் மற்றும் பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT