சிவகங்கை

அடிப்படை வசதி கோரி வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் முற்றுகை

DIN

திருப்பத்தூர் ஒன்றியம் கண்டவராயன்பட்டி ஊராட்சி காவனூர் கிராமத்தில் குடிநீர், தெருவிளக்கு பழுது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சரிசெய்யக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் செவ்வாய்கிழமை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர்.
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காவனூர் கிராமத்தில் உள்ள பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி கடந்த ஆறு மாதமாக பழுதாகியுள்ளது. அங்குள்ள மேல்நிலைத் தொட்டியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன் காவிரி குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யும் போது, அதன் அருகே சென்ற மேல்நிலைத் தொட்டியின் குழாயும் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியினருக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியாமல் இருந்தது. இதனால் கிராமத்தினர் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று கண்மாய் நீரை எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதனை சரி செய்ய அக்கிராமத்தினர் திருப்புத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் செவ்வாய்கிழமை கிராம பொதுமக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனையறிந்த கண்டவராயன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த கிராம நிர்வாக வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு, எங்கள் கிராமத்தில் தெருவிளக்குகள் முழுமையாக எரியவில்லை, குடிநீர் வசதி இல்லை என்றும், வீடுகளில் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது என்றும் இதுகுறித்து ஆணையரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தனர்.
மேலும் உடனடியாக எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனையடுத்து, குடிநீர் உடைப்பு சரிசெய்யப்பட்டது. மேலும் மற்ற பிரச்னைகளும் விரைவில் சரி செய்யப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தின் பேரில் கிராமத்தினர் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT