சிவகங்கை

மானாமதுரையில் நான்கு வழிச்சாலை திட்டத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரம்

DIN

மதுரை-ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தில் மானாமதுரையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 
   மதுரை-ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தில் ரயில் பாதைகள் குறுக்கிடும் இடங்களான திருப்புவனம், மானாமதுரை, மேலப்பசலை, கமுதக்குடி ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 80 சதவீதப் பணிகள் முடிவடைந்து
விட்டன. 
மானாமதுரையில் புறவழிச்சாலையில்  மதுரை-ராமேசுவரம் ரயில் பாதைக்கு மேல் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மானாமதுரையின் எல்கை பகுதியான தல்லாகுளம் முனியாண்டி கோயிலில் தொடங்கும் இப் பாலம் புதிய பஸ் நிலையம் அருகே முடிவடைகிறது. ரயில் பாதைக்கு மேல் கான்கிரீட் தூண்கள் அமைத்தும் மற்ற பகுதிகளில் மணலைக் கொட்டியும் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. 
பாலத்தின் இரு புறமும் அணுகு சாலைகளும் அமைக்கப்படுகின்றன. பாலம் அமைக்கும் பணிக்காக தற்போது ரயில் பாதை அருகே ராட்சத இயந்திரங்களைக் கொண்டு பூமியில் துளையிட்டு கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த பாலம் அமைப்பதற்காக இப் பகுதியில் இருந்த ரயில்வே கேட் வேறு பகுதியில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 
  இந்த பாலம் அமைக்கும் பணி முடிந்ததும் நான்குவழிச்சாலையில் முழுமையாக போக்குவரத்து தொடங்குவதற்கு முன்னதாகவே இப் பாலம் போக்குவரத்துக்கு பயன்பாட்டிற்கு வந்துவிடும் என கூறப்படுகிறது. தற்போது ரயில் வரும் நேரங்களில் மேற்கண்ட ரயில்வே கேட் மூடப்பட்டதும் கேட்டின் இரு புறமும் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் நிற்கின்றன. இந்தப் பாலத்தில் போக்குவரத்து தொடங்கியதும்  தடையின்றி வாகனங்கள் நிற்காமல் செல்லும் நிலை ஏற்பட்டுவிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT