சிவகங்கை

அழகப்பா பல்கலை. துணைவேந்தருக்கு விருது

DIN

மொழி, பண்பாடு, கலை இலக்கியம் போன்றவற்றை போற்றி ஆதரித்து வளர்த்து வருவதற்காகவும், சீரிய உயர் கல்வி பணிகளுக்காகவும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சொ. சுப்பையாவுக்கு கொல்கத்தாவிலுள்ள இந்திய கிழக்கத்திய இயல் பாரம்பரிய நிறுவனம் சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட் டுள்ளது.
இந்த விருதின் பாராட்டுச் சான்றிதழில் இலக்கியம், மொழி, கலை மற்றும் பண்பாடு தொடர்பான பழமையான கலைகளைப்போற்றி ஆதரித்து வளர்த்துவருவதற்காகவும், அவற்றின் புதுமைத்தன்மைகளை அனைவரும் அறியச்செய்து வரும் நற்பணிகளுக்காகவும் இவ்விருது துணைவேந்தருக்கு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த விருதை கடந்த பிப். 6-ஆம் தேதி 
புதுதில்லியில் நடைபெற்ற 41-ஆவது ஆண்டு கிழக்கத்திய பாரம்பரியப் பன்னாட்டுக் கருத்தரங்கில் 
அந்நிறுவனத்தின் வேந்தர் சத்தியநாராயண்சக்ரவர்த்தி வழங்கினார்.
மேலும் உயரியகல்வி சார்ந்த பின்புலத்திற்காகவும், கல்வியில் சிறந்த நடைமுறைகளை மேற்கொண்டு உயர்கல்வியை வளரச் செய்வதற்காவும் கடந்த பிப். 7-ஆம் தேதி நொய்டா அமிட்டிப்பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற18-ஆவது பன்னாட்டு உலக உச்சி மாநாடு இன்புஷ் 2018 எனும் விழாவில் அமிட்டி பல்கலைக்கழகத் துணைவேந்தர் குரீந்தர்சிங் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்பையாவுக்கு  அமிட்டி உயர்கல்வியாளர் விருது வழங்கி கௌரவித்தார். 
இந்த உச்சி மாநாட்டில் 500-க்கும் மேற்பட்ட கல்விச்சிந்தனையாளர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர் என்று அழகப்பா 
பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஹா. குருமல்லேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT