சிவகங்கை

திருப்பத்தூர் அருகே கிராமத்தில் மஞ்சுவிரட்டு

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வெளியாரி கிராமத்தில் சனிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
கலிதீர்த்த அய்யனார் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு நடைபெற்றது.
முன்னதாக வெள்ளிக்கிழமை அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று புரவி ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை ஊரார்கள் கோயிலில் சிறப்பு பூஜை செய்தனர்.
பின்னர் வேட்டி துண்டுகளுடன் ஊர்வலமாகச் சென்று தொழுவில் கட்டப்பட்டிருந்த மாடுகளுக்கு மரியாதை செய்தனர்.
காலை 10 மணியளவில் தொழுவிலிருந்து மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து வயல் வெளிப் பகுதிகளிலும் கட்டுமாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன.
பட்டமங்கலம், கண்டரமாணிக்கம், திருக்கோஷ்டியூர்,
ஆத்தங்கரைப்பட்டி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, மதகுபட்டி, உள்ளிட்ட சுற்றுப்புர கிராமங்களிலிருந்து காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT