சிவகங்கை

"சிந்தித்தல், தேடுதலில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும்'

DIN

வகுப்பறையில் அனைத்துவிதமான பாடங்களை நடத்துவதைவிட ஆர்வம், சிந்தித்தல் மற்றும் தேடுதலில் மாணவர்களை ஈடுபடுத்த முயற்சிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தங்கசாமி தெரிவித்தார்.
காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ஸ்ரீராஜராஜன் கல்வியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீராஜராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் 150 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி அவர் பேசியதாவது: ஒவ்வொரு மாணவருக்கும் புரிந்துகொள்ளும் திறன் மாறுபடும் என்பதால் அவரவர்களுக்கு ஏற்றார்போல் பாடங்களை ஆசிரியர் நடத்த வேண்டும். வகுப்பறையில் அனைத்துவிதமான பாடங்களை நடத்துவதைவிட ஆர்வம், சிந்தித்தல் மற்றும் தேடுதலில் மாணவர்களை ஈடுபடுத்த முயற்சிக்க வேண்டும் என்றார்.
முன்னதாக மகளிர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் சகாயராணி வரவேற்றார். ஸ்ரீராஜராஜன் கல்வியியல் கல்லூரி முதல்வர் ரா. சிவக்குமார் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT