முகப்பு
சிவகங்கை

பிப். 3 இல் காரைக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கு கம்ப ராமாயணப் பேச்சுப் போட்டி

காரைக்குடியில் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான கம்ப ராமாயணப் பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் போட்டி நடைபெறவிருக்கிறது.

Updated On : 24 ஜனவரி 2019, 12:42 am IST
பகிர்:

காரைக்குடியில் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான கம்ப ராமாயணப் பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் போட்டி நடைபெறவிருக்கிறது.
   இதுகுறித்து கம்பன் அறநிலைத் தலைவர் சத்தி அ. திருநாவுக்கரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: 2019 மார்ச் மாதம் நடைபெறவுள்ள 81-ஆம் ஆண்டு கம்பன் திருநாளையொட்டி காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை கல்லூரி மாணவர்களுக்கு கம்ப ராமயணத்தில் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கு முதல் பரிசாக ரூ. 2 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 1000-ம் வழங்கப்படும். மேலும் அன்று பிற்பகல் திருக்குறள் பேச்சுப்போட்டியும் நடைபெறும். இதற்கும் முதல் பரிசாக ரூ. 2 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 1000-ம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு கம்பன் அறநிலை செயலாளர் பேராசிரியர் அய்க்கண், கம்பன் மணிமண்டபம், காரைக்குடி -630001 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 04565 - 237600 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 94442 73549 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.