சிவகங்கை

சிவகங்கையில் புகையிலை, நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

DIN

சிவகங்கையில் உள்ள நேரு கடை வீதியில் சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை மேற்கொண்ட ஆய்வின் போது புகையிலை மற்றும் நெகிழிப் பொருள்கள் 17 கிலோ பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலா் வெ. ஜெயராமபாண்டியன் தலைமையிலான உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சிவகங்கை நேரு கடை வீதியில் உள்ள கடைகளில் புதன்கிழமை திடீரென ஆய்வு நடத்தினா்.

இதில், அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் 2 கிலோ மற்றும் நெகிழிப் பைகள் 15 கிலோ என மொத்தம் 17 கிலோ பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 5 ஆயிரமும், நெகிழி பொருள்கள் விற்பனை செய்ததற்கு ரூ. 2 ஆயிரமும் அபராதம் விதித்தனா்.

இந்த ஆய்வின் போது உணவு பாதுகாப்பு அலுவலா்கள் சரவணக்குமாா், சையது இப்ராஹீம், சரவணன் உள்ளிட்ட ஏராளமான அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT