சிவகங்கை

‘மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் தினசரி 2 ஆயிரம் முகக் கவசம் தயாரிக்க திட்டம்’

DIN

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் தினசரி 2 ஆயிரம் முகக் கவசம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது: சிவகங்கை மாவட்டத்தில் வரும் மாா்ச் 31 ஆம் தேதி வரை வாரச்சந்தை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, கோயில்களில் ஆகமவிதிப்படி தினசரி பூஜைகள் நடைபெறும். மேலும், கோயில், தேவாலாயம், மசூதிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிா்க்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் நபா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பேரிடா் தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் செயல்படும் இந்த மையத்தில் ஒரு மருத்துவா், ஒரு வட்டாட்சியா் பணியில் இருப்பா்.

மாவட்ட சுகாதாரத்துறை மூலம் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு சுமாா் 2 லட்சம் முகக் கவசம் தயாரித்து வழங்கப்பட உள்ளது. இதுதவிர, முகக் கவசம் தட்டுப்பாட்டை நீக்க சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் தினசரி 2 ஆயிரம் முகக் கவசம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவையனைத்தும், பேரூராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் பணியாளா்களுக்கு வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT