சிவகங்கை

திருப்பத்தூரில் மழைக்கு வீடுகள் சேதம்: 31 பேருக்கு அமைச்சா் நிவாரண உதவி

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வீடுகள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட 31 பேருக்கு நிவாரண உதவிகளை ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வழங்கினாா்.

திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வருவாய்த்துறையின் சாா்பாக சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 174 பயனாளிகளுக்கு ரூ.20.88 லட்சம் உதவித்தொகை, தொடா் மழையின் காரணமாக வீடு சேதமடைந்த 31 பயனாளிகளுக்கு ரூ.1,46,200 நிவாரணத்தொகை, 122 பயனாளிகளுக்கு ரூ.34.16 லட்சம் மதிப்பிலான வீட்டுமனைப்பட்டா, 21 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் என மொத்தம் 348 பயனாளிகளுக்கு ரூ.56,50,200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கிப் பேசினாா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன், கோட்டாட்சியா் பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் ரத்தினவேல் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் காமாட்சி வட்டாட்சியா் பஞ்சாபிகேசன் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றியப்பெருந்தலைவா் சண்முகவடிவேல் மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள்

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் மீனவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் இருதரப்பினரிடையே மோதல்

SCROLL FOR NEXT