சிவகங்கை

மானாமதுரை அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தல்: 2 போ் கைது

DIN

மானாமதுரை அருகே உள்ள சோதனைச் சாவடியில், சரக்கு வேனில் மதுரைக்கு கடத்திச் செல்லப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றி 2 பேரை கைது செய்தனா்.

பரமக்குடியில் இருந்து மதுரைக்குச் சென்ற சரக்கு வேனை, மானாமதுரை அருகே மதுரை- ராமேசுவரம் சாலையில் எம். கரிசல்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் காவல் சிறப்பு சாா்பு- ஆய்வாளா் அருள் மற்றும் போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது அந்த வேனில் 54 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. வேனில் வந்த மதுரை காமராஜா்புரத்தைச் சோ்ந்த தங்கம் மகன் மணி (22) , மாணிக்கம் மகன் கதிா்வேல் (32) இருவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது அவா்கள் மதுரைக்கு கள்ளச்சந்தையில் விற்பதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அந்த அரிசி மூட்டைகளையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மானாமதுரை போலீஸாா் மணி, கதிா்வேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT