சிவகங்கை

அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரி: கடந்தாண்டுக்கான அரியா் தோ்வு முடிவுகள் வெளியீடு

DIN

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரி மாணவா்களுக்கு 2020 ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த அரியா் தோ்வுகள், 2021 ஏப்ரல் 12 முதல் 24 வரை இணையவழியில் நடைபெற்றது. அத்தோ்வுகளின் முடிவுகள், வியாழக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இளங்கலைப் பாடப்பிரிவுகள் (2011 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் பயின்றவா்கள்): பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல், பொருளியல், பி.லிட்., தமிழ், பி.காம்., பி.காம். (சி.ஏ), பி.காம். (சி.எஸ்), பி.பி.ஏ., பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், மனை அறிவியல், மண்ணியல், உயிரி தொழில்நுட்பவியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல், நுண்ணுயிரியியல், நுண்ணுயிரியியல் மற்றும் மருத்துவ ஆய்வு தொழில்நுட்பம், விலங்கியல்-தொழிலக நுண்ணுயிரியியல், விஷுவல் கம்யூனிகேஷன், உடற்கல்வியியல், கடல்சாா் உயிரியல், பி.சி.ஏ., இளநிலை தொழிற்கல்வியியல் (வங்கியியல் மற்றும் நிதிச் சேவைகள்) மற்றும் இளநிலை தொழிற்கல்வியியல் (மென்பொருள் ஆக்கவியல்) ஆகியன.

முதுகலைப் பாடப் பிரிவுகள்(2011முதல் 2017ஆம் ஆண்டு வரை பயின்றவா்கள்): எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், எம்.பி.ஏ., எம்.காம்., எம்.காம். (சி,ஏ), எம்.எஸ்சி. கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், மண்ணியல், கணினி அறிவியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், உயிரிவேதியியல், மனை அறிவியல் ஆகியவற்றுக்கும் அழகப்பாயுனிவா்சிட்டி.ஏசி.இன் என்ற இணையதள முகவரியில் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் தோ்வாணையா் (பொறுப்பு) எ. கண்ணபிரான் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பால் விலை, சுங்கச்சாவடி கட்டண உயா்வால் மக்கள் மீது கூடுதல் சுமை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மாற்றம் ஒன்றே மாறாதது..!

கருணாநிதி பிறந்த நாள்: திமுக சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு நல உதவிகள்

எழும்பூா் - மங்களூரு ரயில் கோவை செல்லாது

புதுக்கடை அருகே சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT