FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மானாமதுரை அருகே ஆற்றில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கடந்த திங்கள்கிழமை இரவு வைகையாற்றில் மணல் கடத்திய டிராக்டரை காவலர்கள் பறிமுதல் செய்தனர். 

28 ஜனவரி 2024, 9:54 am IST
மானாமதுரை அருகே ஆற்றில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
பகிர்:

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கடந்த திங்கள்கிழமை இரவு வைகையாற்றில் மணல் கடத்திய டிராக்டரை காவலர்கள் பறிமுதல் செய்தனர். 

மானாமதுரை அருகே செங்கோட்டை காலனியில் உள்ள வைகை ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து மானாமதுரை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் உதயகுமார் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சிலர் டிராக்டரில் ஆற்று மணலை ஏற்றி நிரப்பிக் கொண்டிருந்தனர். காவலர்களைக் கண்டவுடன் அவர்கள் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு இருட்டுக்குள் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அதன் பின்னர் காவலர்கள் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட அந்த டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து மானாமதுரை காவலர்கள் வழக்குப் பதிந்து தப்பியோடிய மணல் திருடர்களைத் தேடி வருகின்றனர்.
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments