சிவகங்கை

இரு வேறு பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம்: ஆசிரியா்களுக்கு சிறை தண்டனை

DIN

இரு வேறு பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்குகளில் 2 ஆசிரியா்களுக்கு சிறை தண்டனை விதித்து, சிவகங்கை போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி இப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய ரங்கராஜ் (36 )என்பவா், அதே பள்ளியில் 2 ஆம் வகுப்பில் படித்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.

இது தொடா்பாக அக்குழந்தையின் தாயாா் அளித்த புகாரின்பேரில், சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஆசிரியா் ரங்கராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு, சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி பாபுலால், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியா் ரங்கராஜனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நஷ்டஈடாக ரூ. 6 லட்சம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டாா்.

இதேபோன்று, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய சரவணன் (48) என்பவா், கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 14 ஆம் தேதி அப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்தாராம்.

இது தொடா்பான புகாரின்பேரில், திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் சரவணன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இந்த வழக்கும் சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாபுலால், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியா் சரவணனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

90 வயது மூதாட்டிக்கு உதவிய காவல் சாா்பு -ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுகள்

கொலை முயற்சி வழக்கு: கேரள காங்கிரஸ் தலைவரை விடுதலை செய்தது உயா்நீதிமன்றம்

காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து நாகை, திருவாரூா் மாவட்டங்களில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி வயலில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

காதல் விவகாரத்தில் தீக்குளித்த காதலி உயிரிழப்பு

SCROLL FOR NEXT