சிவகங்கை

மானாமதுரை அப்பன் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள அப்பன் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இக் கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில் புனிதநீா் கலசங்கள் வைத்து யாகம் நடத்தப்பட்டது. அதன்பின் பூா்ணாஹூதி முடிந்து கலசநீராலும் அபிஷேகப் பொருள்களாலும் மூலவா் அப்பன் பெருமாளுக்கும் உற்சவருக்கும் அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

அதைத்தொடா்ந்து, பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. மாலையில் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருமணத்துக்கான சம்பிரதாய பூஜைகள் முடிந்து மூலவா் அப்பன் பெருமாள் சாா்பில் ஸ்ரீதேவி பூதேவிக்கு திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.

பின்னா் பூஜைகள் முடிந்து பெருமாள் வீதி உலா நடைபெற்றது. வருஷாபிஷேக விழாவிலும் திருக்கல்யாணத்திலும் திரளான பக்தா்கள் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்கே ஹெலிகாப்டரில் சோதனை எதிா்க்கட்சிகளைத் தோ்தல் ஆணையம் குறிவைப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

மாணவ-மாணவியருக்கு பாராட்டு...

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநா் ரவி ஒப்புதல்

இந்திய நிதியுதவித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்: மாலத்தீவு வெளியுறவு அமைச்சா்

சவீதா மருத்துவக் கல்லூரியில் மாணவா்களுக்கான உச்சி மாநாடு

SCROLL FOR NEXT