சிவகங்கை

இளையான்குடியில் குடிநீா் குழாய் உடைப்பு:சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீா்

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாவதாக புகாா் தெரிவிக்கப்பட்டது.

இளையான்குடி நகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இளையான்குடி வழியாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு காவிரி குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது.

இதற்காக இளையான்குடி நகா் பகுதியில் பல இடங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டன. இந்த நிலையில், இளையான்குடி கண்மாய்க் கரை பகுதியில் பரமக்குடி சாலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே சாலையோரமாக பதிக்கப்பட்டிருந்த காவிரி கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் நகா் சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் அம்பலம் ராவுத்தா் நெய்னாா் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு காவிரி தண்ணீா் செல்லும் குழாய் கடந்த 4 நாள்களுக்கு முன்பு உடைந்து தண்ணீா் வீணாக வெளியேறி வருகிறது. இதுவரை யாரும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினா் இதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT