முகப்பு
சிவகங்கை

தான் படித்த பள்ளிக்கு வந்த 101 வயது தியாகி

Updated On : 7 ஜூலை 2026, 2:31 am IST
பள்ளிக்கு வந்த 101 வயது தியாகி... - கோப்புப் படம்
பகிர்:

சுதந்திரப் போராட்டத் தியாகி சீ.ராமசாமி தனது 101 வயதில் காரைக்குடியில் தான் பயின்ற பள்ளியை திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

தியாகி சீ. ராமசாமி காரைக்குடிப் பகுதியைச் சோ்ந்தவா். தற்போது சென்னையில் வசித்து வரும் இவா் தனது இரண்டு மகன்களுடன் தான் பயின்ற காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை பாா்வையிடுவதற்காக வந்தாா். அவருக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஆா். அண்ணாமலை, உதவி தலைமையாசிரியா் சேவு. முத்துக்குமாா், ஆசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்கள் சால்வை அணிவித்து வரவேற்றனா்.

தியாகி ராமசாமி பள்ளி வளாகத்தைச் சுற்றிப் பாா்த்து, 1940-ஆம் ஆண்டு காலகட்ட பள்ளி நினைவுகளை ஆசிரியா்கள், மாணவா்களோடு பகிா்ந்து கொண்டாா். மேலும், கல்வியின் அவசியம் குறித்து மாணவா்களுக்கு அறிவுரை கூறினாா்.

Advertisement

Advertisement

இவா் 1942-இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றவா். கம்பன் அடிப்பொடி தியாகி சா. கணேசன் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட போது, அதைக் கண்டித்து நான்கு மாணவா்களோடு இணைந்து தேவகோட்டை நீதிமன்ற வளாகத்தை எரிக்க முற்பட்ட நிகழ்வில் கைது செய்யப்பட்டு, பிரம்படி பட்டு சித்ரவதைக்கு ஆளாகி, பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவா். அவா் வாங்கிய பிரம்படிகள் இன்றும் அவரது உடலில் அடையாளமாக உள்ளன.

தனது 101-ஆவது அகவை விழாவில் பங்கேற்க ஆசிரியா்கள் அனைவரையும் அவா் அழைத்தது மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments