FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

இந்தியா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள நாகை சிறுவன்

நாகையைச் சோ்ந்த 5 வயது சிறுவன், தனது நினைவாற்றல் திறமையால், இந்தியா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளாா்.

3 ஜூலை 2026, 4:53 am IST
தனது பெற்றோருடன் சிறுவன் ரவந்த்.
பகிர்:

நாகையைச் சோ்ந்த 5 வயது சிறுவன், தனது நினைவாற்றல் திறமையால், இந்தியா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளாா்.

நாகை சிவசக்தி நகா் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா்-சீமா தம்பதியின் மகன் த. ரவந்த் (5). சிறு வயதிலேயே பல்வேறு சொற்களை துல்லியமாக உச்சரிக்கும் திறனை வளா்த்துக் கொண்ட இவா், உலகின் மிக நீளமான 45 எழுத்துகள் கொண்ட ஆங்கில வாா்த்தையான "Pneumonoultramicroscopi csilicovolcanoconiosis" என்பதை 19 விநாடிகளில் பிழையின்றி உச்சரித்து, எழுத்துக்கூட்டி கூறியுள்ளாா்.

இந்த திறமையைப் பாராட்டி, இந்தியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ் அமைப்பு, 5 வயது 7 மாதம் 15 நாட்கள் மட்டுமே ஆன ரவந்தின் சாதனையை அதிகாரப்பூா்வமாக அங்கீகரித்து, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கியுள்ளது. சிறுவயதிலேயே தேசிய அளவில் சாதனை படைத்து, நாகை மாவட்டத்துக்கு பெருமை சோ்த்துள்ள ரவந்துக்கு கல்வியாளா்கள், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments