FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

காா் மீது பேருந்து மோதியதில் சமையல்காரா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் சமையல்காரா் உயிரிழந்தாா்.

8 ஜூலை 2026, 5:04 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே திங்கள்கிழமை காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் சமையல்காரா் உயிரிழந்தாா். பெண் உள்பட இருவா் காயமடைந்தனா்.

மானாமதுரை அருகேயுள்ள மணக்குளத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (48). சமையல்காரரான இவா், இதே ஊரைச் சோ்ந்த மனோகரன், செய்களத்துரைச் சோ்ந்த சிவக்குமாா் மனைவி பரமேஸ்வரி (35) ஆகிய மூவருடன் காரில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தாா்.

திருப்புவனம் அருகே மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் கீழடி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்த போது, ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசு பேருந்து இவா்களது காா் மீது மோதியது.

Advertisement

Advertisement

இதில் காயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு கண்ணன் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கீழடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments