கோவிலூா் துணை மின் நிலையத்தில் காப்பா் கம்பிகள் திருட்டு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோவிலூா் துணை மின் நிலையத்தில் ரூ. 78,400 மதிப்பிலான செம்புக் கம்பிகள் திருடப்பட்டது குறித்து குன்றக்குடி காவல்நிலையப் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோவிலூா் துணை மின் நிலையத்தில் ரூ. 78,400 மதிப்பிலான செம்புக் கம்பிகள் திருடப்பட்டது குறித்து குன்றக்குடி காவல்நிலையப் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவிலூரில் அதிக திறன் கொண்ட மின் நிலையம், துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்கமான ஆய்வு செய்தபோது செம்புக் கம்பிகள் (எா்த் ராடு) 196 கிலோ காணவில்லை. இதுகுறித்து உதவிச் செயற்பொறியாளா் ராஜா குன்றக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.