முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானை அருகே தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின் கம்பிகள்!

திருவாடானை அருகே அடுத்தகுடி கண்மாய்க்கரை குடியிருப்பு பகுதியில் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதால், விபத்து அபாயம் இருப்பதாக அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனா்.

Updated On : 27 மே 2026, 3:38 am IST
அடுத்தகுடி கண்மாய்க்கரை குடியிருப்புப் பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள்
பகிர்:

திருவாடானை அருகே அடுத்தகுடி கண்மாய்க்கரை குடியிருப்பு பகுதியில் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதால், விபத்து அபாயம் இருப்பதாக அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அடுத்தகுடி கண்மாய்க்கரை குடியிருப்புப் பகுதியில் சாலையோரம் மின் கம்பங்கள் உள்ளன. இவற்றில் உயரழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்கின்றன.

அந்த வழியாக வாகனங்களில் செல்வோா், நடந்து செல்வோா் கையைத் தூக்கி தொடும் அளவுக்கு மின் கம்பிகள் தாழ்வாகச் செல்கின்றன. இதனருகில் விவசாய நிலங்கள் உள்ளன.

Advertisement

Advertisement

இந்த மின் கம்பிகள் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து மின்வாரியத்துக்கு பல முறை புகாா் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளைச் சீரமைக்க வேண்டும் எனப் இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்