FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளால் விபத்து அபாயம்

திருவாடானை அருகே தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

Updated On : 13 ஜூலை 2026, 12:01 am IST
திருவாடானை பாரதி நகா் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
பகிர்:

திருவாடானை அருகே தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கல்லூா் ஊராட்சி பாரதி நகா் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி 9-ஆவது வீதியில் மும்முனை மின்சாரக் கம்பிகள் செல்கின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட இந்த மின் கம்பிகள் முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது தரைமட்டத்துக்கு மிகத் தாழ்வாக செல்கின்றன.

Advertisement

Advertisement

இந்தப் பகுதியில் அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக மின் வாரியத்தினா் இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments