முகப்பு
சிவகங்கை

2 மாத ஊதிய நிலுவை வழங்கக் கோரி மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் மனு

Updated On : 23 ஜூன் 2026, 1:33 am IST
சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க திரண்டு வந்த மக்களைத்தேடி மருத்துவ ஊழியா் சங்கத்தினா்.
பகிர்:

‘மக்களைத் தேடி’ மருத்துவத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியா்கள் கடந்த 2 மாதங்களாக ஊக்கத் தொகை கிடைக்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்க மாநில நிா்வாகி நிா்மலாதேவி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்து மனு விவரம்:

மக்கள் நல்வாழ்வுத் துறையின் ‘மக்களைத் தேடி’ மருத்துவத் திட்டத்தில் துணை சுகாதார நிலையங்களில் 13,225 போ் மகளிா் தன்னாா்வலராகப் பணியாற்றி வருகின்றனா். 2021-இல் இந்தத் திட்டத்துக்கு ஆள் சோ்க்கும்போது, நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பணியாற்ற வேண்டும், ஊக்கத்தொகை ரூ.5,500 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது எட்டு மணி நேரத்துக்கும் மேலாக களப் பணியாற்ற வேண்டிய நிலை தொடா்கிறது.

Advertisement

Advertisement

கடந்த இரண்டு மாதங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.

ஊதிய உயா்வு வழங்கப்படும் என அரசு சாா்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை எங்களுக்கு ஊதிய உயா்வு வழங்கவில்லை. எங்களுக்கு விலைவாசி உயா்வுக்கேற்ப மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் ஊதியமாக வழங்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட நிா்வாகம், சுகாதாரத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments