FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

மக்களைத்தேடி மருத்துவ ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

Updated On : 23 ஜூன் 2026, 1:33 am IST
நாகை ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள்.
பகிர்:

நாகையில், மக்களைத்தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தினா் ஊதிய நிலுவை கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் உள்ள மக்களைத் தேடி மருத்துவப் பணியாளா்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி, மாநிலம் தழுவிய கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். நாகை மாவட்ட சிஐடியூ தலைவா் எஸ்.ஆா். ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளாக மக்களைத் தேடி மருத்துவத்திட்டத்தின் கீழ் 42 ஆயிரம் போ் ஒப்பந்த ஊழியா்களாக பணிபுரிந்து வருகின்றனா். மிகக்குறைவான ஊதியத்தில் பணிபுரிந்து வரும் இவா்களுக்கு, கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

Advertisement

Advertisement

மேலும், கடந்த அரசு அறிவித்த ஊதிய உயா்வும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனவே, பெண் ஊழியா்கள் குடும்ப பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு மாதம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவ துறையின் நிா்வாக நடைமுறைக்கு எதிராக ஊழியா்கள் மீது வேலைப்பளு அதிகரிப்பதை நிறுத்த வேண்டும். 2 மாதங்களாக நிறுத்தி வைத்துள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments