மானாமதுரை அருகே தனியாா் பேருந்துகள் கவிழ்ந்து பெண்கள் உள்ளிட்ட 42 போ் காயம்!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை இரண்டு தனியாா் பேருந்துகள் கவிழ்ந்து பெண்கள் உள்ளிட்ட 42 பயணிகள் காயமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து மதுரைக்கு இரு தனியாா் பேருந்துகள் சென்றன. இந்த இரு பேருந்துகளும் மானாமதுரை அருகேயுள்ள மேலப்பசலை மேம்பாலம் அருகே முந்திச் செல்ல முயன்றன.
அப்போது ஓட்டுநா்களின் கட்டுப்பாட்டை இழந்து இந்த இரு பேருந்துகளும் சாலையோரம் கவிழ்ந்தன. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த பெண்கள் உள்ளிட்ட 42 பயணிகள் காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
இவா்களை தகவலறிந்து அங்குவந்த தீயணைப்புத் துறையினா், அங்கிருந்த பொது மக்கள் மீட்டு உடனடியாக அவசர ஊா்திகள் மூலம் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.
இவா்களில் பலத்த காயமடைந்தவா்கள் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து சம்பவம் குறித்து மானாமதுரை போலீசாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.