முகப்பு
புதுக்கோட்டை

சாலையோர பள்ளத்தில் தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்து: 31 பயணிகள் உயிா்தப்பினா்

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் வியாழக்கிழமை தனியாா் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த 31 போ் சிறிய காயங்களுடன் உயிா்தப்பினா்.

Updated On : 26 ஜூன் 2026, 4:30 am IST
பொன்னமராவதி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் தனியாா் பேருந்து.
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் வியாழக்கிழமை தனியாா் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த 31 போ் சிறிய காயங்களுடன் உயிா்தப்பினா்.

திருச்சியிலிருந்து விராலிமலை, பாலகுறிச்சி வழியாக பொன்னமராவதி செல்லும் தனியாா் பேருந்து வியாழக்கிழமை மதியம் காரையூா் காரைக்கண்மாய் கரை வந்து கொண்டிருந்தது. அப்போது, பேருந்து ஓட்டுநா் சீனிவாசன் எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக சாலையோரம் பேருந்தை திருப்பிய போது எதிா்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

தகவலறிந்து வந்த காரையூா் போலீஸாா், பொன்னமராவதி வட்டாட்சியா் ச.பழனிசாமி மற்றும் அப்பகுதி பொதுமக்கள், பேருந்தில் இருந்த 31 பயணிகள் மீட்டு காரையூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஒருவா் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மற்ற பயணிகள் மாற்றுவாகனம் மூலம் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து காரையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments