ஆம்பூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் காயம்
ஆம்பூர் அருகே சாலையோர பள்ளத்தில் அரசு விரைவுப் பேர்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து...
ஆம்பூர் அருகே சாலையோர பள்ளத்தில் அரசு விரைவுப் பேர்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் புதன்கிழமை அதிகாலை படுகாயமடைந்தனர்.
கர்நாடகம் மாநிலம், பெங்களூருவில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு விரைவுப் பேருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Advertisement
Advertisement
இதில், பேருந்தில் இருந்து 20 பயணிகள் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து ஆம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Regarding the accident in which a government express bus overturned into a roadside ditch near Ambur...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.