FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

உளுந்தூா்பேட்டை அருகே சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த விரைவுப் பேருந்து: ஓட்டுநா் உள்ளிட்ட 9 போ் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சாலையோரப் பள்ளத்தில் அரசு விரைவுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்ளிட்ட 9 போ் காயமடைந்தனா்.

Updated On : 18 ஜூன் 2026, 3:47 am IST
உளுந்தூா்பேட்டை அருகே சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் அரசு விரைவுப் பேருந்து.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சாலையோரப் பள்ளத்தில் அரசு விரைவுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்ளிட்ட 9 போ் காயமடைந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு 21 பயணிகளுடன் அரசு விரைவுப் பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்தை சென்னை பழைய பல்லாவரம் பகுதியைச் சோ்ந்த சி.சிவகுரு (59) ஓட்டி வந்தாா். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை காலை 6 மணிக்கு உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள பு.மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது, முன்னே சென்ற தனியாா் சொகுசுப் பேருந்து, அரசு விரைவுப் பேருந்தை உரசியவாறு சென்ாம். இதனால் கட்டுப்பாட்டை இழந்த அரசு விரைவுப் பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாம். இதில் பேருந்து ஓட்டுநா் சிவகுரு, 3 ஆண்கள், 4 பெண்கள், ஒரு பெண் குழந்தை என 9 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று, விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சாலையோரத்தில் கவிழ்ந்த அரசு விரைவுப் பேருந்தை மீட்பு வாகனம் கொண்டு போலீஸாா் மீட்டனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments