முகப்பு
தேனி

கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கால்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாடி

Updated On : 18 நவம்பர் 2016, 1:29 am IST
பகிர்:

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கால்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாடி வெற்றி பெற்ற தேனியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
 உத்தரபிரதேச மாநிலத்தில், கிராமப்புற விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 19 வயதுக்குள்பட்டோர் பிரிவில் தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தமிழக அணி 2-ஆம் பரிசை வென்றது.
 இதையடுத்து, தமிழக அணியில் பங்கேற்ற தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ராகவேந்திரன், முகமது இப்ராஹிம், ஹர்சவர், கூடலிங்கம், தேனி மாவட்ட கால்பந்து கழக வீரர் எஸ்.டி.முருகேசன் ஆகியோருககு, மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். மாவட்ட கால்பந்து சங்கத் தலைவர் டி.கதிரேசன், துணைத் தலைவர் தங்கராஜ், செயலர் மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.